கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம்
தாமஸ்மலை ஒன்றிய தேமுதிக ஆலோசனை கூட்டம் கோவிலம்பாக்கத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆர்.பி.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் கலந்து கொண்டு பேசினார். இதில், கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளில் ஒன்றியம் முழுவதும் கட்சி கொடியேற்றி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவி வழஙகுவது, பொதுக்கூட்டம் நடத்துவது, தீவிர உறுப்பினர் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் ஜி.வினோத்குமார் மற்றும் நிர்வாகிகள் கண்ணையா, ஜெய்சங்கர், பரமதாஸ், முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.