கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை வரும் ஜூலை 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பங்களாவில் கடந்த 2017- ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபு என்பவரைத் தவிர சயான், வளையாறு மனோஜ், சித்தஞ்சாய் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது, நிபந்தனை ஜாமீனில் தளர்வு கோரி வாளையாறு மனோஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கொலை, கொள்ளை தொடர்பாக, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு சென்று விசாரிக்க தனிப்படையினர் முடிவு செய்துள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் ஜூலை 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.