Skip to main content

கமலஹாசன் எது எங்கு என தெரிந்து பேச வேண்டும்: உடுமலை ராதாகிருஷ்ணன்

Published on 21/10/2018 | Edited on 21/10/2018
udu

 

கோவை விமான நிலையத்தில் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

 அப்போது அவர், தமிழக அரசு மக்களுக்கான அரசு என்பதில் முழு மூச்சக இருக்கிறோம். 
ஏழை எளியோர் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும் என பணியாற்றி வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் விலையில்லா ஆடு எட்டரை லட்சம் பேருக்கு கொடுத்தோம். இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் ஆடுகள் கொடுத்துள்ளோம்.
 

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 77 ஆயிரம் பேருக்கு 50 நாட்டுக்கோழி வழங்கும் திட்டம் டெண்டர் கோரப்பட்டு முதல்வர் விரைவில் துவக்க உள்ளார்.

 

 கமலஹாசன் எது எங்கு என தெரிந்து பேச வேண்டும். பொத்தாம் பொதுவாக தமிழகத்தில் ஏதோ நடக்கிறது என்று கூறி அரசியல் செய்ய நினைக்கிறார். பேசுகிறார். 

முதல்வரும் மற்ற அமைச்சர்களும் ஏழை எளியோருக்காக என்ன திட்டங்களை செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு இருக்கிறோம். 


எதிர் கட்சியியில் இருக்கிறோம் என்பதற்காக ஏதாவது சொல்லி கொண்டு இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட தமிழகம் தான் ஒவ்வொரு துறையிலும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.

 

அன்புமணி ராமதாஸ் எதிர்கட்சியில் இருக்கிறோம் என்பதற்காக சொல்லி கொண்டு வருகிறார். எங்களை பொருத்தவரை விஷன் 2023 ஆண்டில் ஏழை எளியோர் இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் பொருளாதார ரீதியில் அனைவரும் உயர வேண்டும் என்பதே நோக்கம். சபரிமலை கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும்.  கோவிலில் அரசியல் செய்வது என்பது இருக்க கூடாது. இவ்வாறு கூறினார்.


 

சார்ந்த செய்திகள்