மோடி பிரதமரா? அல்லது விளையாட்டு வீரரா? என மோடியின் உடற்பயிற்சி வீடியோ குறித்து சாடினார் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.
திருவாரூரில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறுகையில்,
"தமிழகத்தில் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அரசு ஊழியர்கள் சாகட்டும் என தமிழக அரசு நினைக்கிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் மிக பெரிய ஊழல் நடைபெற்று வருகிற இந்த நிலையில் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் ஊழல் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருப்பது சுகாதாரத் துறையா அல்லது ஊழல் நலத்துறையா என்பது புரியவில்லை.
மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ம் தேதி, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாது என முதலமைச்சர் அறிவித்து விட்டார். இந்த ஆட்சியில் எந்த பிரச்சைனையையும் சரியான முறையில் தீர்வு கான அனுகுவதில்லை.
எப்படி தமிழ்நாட்டில் ஜனவரி மாததிற்கு மேல் அணையிலிருந்து நீர் எடுக்க கூடாது என்று சட்டம் உள்ளதோ அதேபோல் கர்நாடகாவும் சட்டம் வகுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் ஏதோ செய்து விட்டதாக தண்டோரா போடுகின்றனர்.
பிரதமர் மோடி கர்நாடக முதல்வரையும் உடற்பயிற்சி செய்ய சவால் விடுத்திருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. மோடி அரசியல்வாதியா அல்லது விளையாட்டு வீரரா என்ற சந்தேகம் எழுகிறது. அப்படி என்றால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு குத்துசன்டை வீரராக போய்விடலாமே. அது பிரதமரின் தரம் தாழ்ந்த செயலாகும்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பதே சரியாக தெரியவில்லை, ஆனால் அவரோ அரசியலுக்கு வருவது உண்மை என கூறுவது அவரது படங்களுக்குகாக உருவாக்கும் விளம்பரமாகவே பார்க்கப்படுகிறது. அவர் மேல்தட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் அடித்தட்டு மக்களின் பிரச்சனை குறித்து அவருக்கு தெரிய
வாய்ப்பில்லை. அவர் வெற்றிகரமான அரசியல் வாதியாக வருவதற்கான அரசியல் ஞானம் இல்லை.இன்னும் வரவில்லை," என்றார்.