Skip to main content

கரூர் எம்.பி. தொகுதி அ.தி.மு.க. கோட்டையா ? காங்கிரஸ் கோட்டையா ? 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

 

கரூர் எம்.பி.தொகுதி பழைய சட்டமன்றத் தொகுதிகள் சீரமைப்புக்கு முன்பு - அரவாக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் என இருந்த தொகுதிகள் மறுசீரமைப்பின் காரணமாக கரூர் மக்களவைத் தொகுதியில் இருந்த மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகியவை நீக்கப்பட்டன. புதிதாக மணப்பாறை, விராலிமலை ஆகிய இரு தொகுதிகள் இணைக்கப்பட்டன. இவை இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டவை ஆகும்.

 

k

 

இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் 6 முறை காங்கிரசும், 6 முறை அதிமுகவும், திமுகவும், தமாகாவும் தலா ஒரு முறை வென்று உள்ளன. இதுவரை இந்த தொகுதியில் வெற்றிபெற்றவர்கள் யார் யார் ? எப்போது ? 

 

கரூர் எம்.பி. தொகுதி கொங்கு மண்டலத்தின் கடைமடை பகுதி அல்லது ஆரம்ப பகுதி என இரண்டு வகையாகவும் பார்க்கலாம். இங்கே கவுண்டர்கள் மட்டுமே ஜெயித்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கவுண்டர்கள், பிறகு பிள்ளைமார்கள், அடுத்து மைனாரட்டி, பிறகு கவுண்டர்கள் தொடர்ந்து அவர்களின் கோட்டையாகவும், காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும் தொடர்ச்சியாக இந்த தொகுதியை தக்கவைத்து கொண்டுள்ளது. அதிமுக கோட்டையிலிருந்து காங்கிரஸ் தொகுதியாக மாற்றுவதற்கான தேர்தலாகவே இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. 

 

1957 - பெரியசாமி கவுண்டர் - காங்கிரசு.

1957-ல் மதராஸ் மாகாணத்தில் கரூர் மக்களவை தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வென்றது. இத்தேர்தலில் 58.45% வாக்குகள் மட்டுமே பதிவானது. சுயேச்சையாக போட்டியிட்ட சேஷய்யனை இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் பெரியசாமி கவுண்டர் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

 

1962 - ஆர். ராமநாதன் செட்டியார் - காங்கிரசு.

சுதந்திர கட்சி 1967 தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியை கைப்பற்றியது. 1962-ல் வென்ற ராமநாதன் செட்டியார் சுமார் 24 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். இத்தேர்தலில் கரூரில் 73.62% வாக்குகள் பதிவானது..

1967 - முத்துச்சாமி கவுண்டர் - சுதந்திரா கட்சி.

 

1971 - கே. கோபால் - காங்கிரசு.
1977 - கே. கோபால் - காங்கிரசு.

சுமார் 73 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமநாதனை தோற்கடித்தார் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபால். 1971 தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியில் 71.18% வாக்குகள் பதிவாகியிருந்தது.
கோபால் மீண்டும் 1977 தேர்தலில் வென்றார். இம்முறை 62.26% வாக்குகள்பெற்றார். ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மீனாட்சி சுந்தரம் சுமார் 1,45,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இத்தேர்தலில் 70.67% வாக்குப்பதிவு நடந்தது. சுமார் 5 லட்சம் பேர் வாக்களித்தனர்.

 

1980 - துரை செபாஸ்டியன் - (காங்கிரசு)

அதிமுக வேட்பாளர் கனகராஜை சுமார் 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் துரை செபாஸ்டியன். இத்தேர்தலில் 67.44% வாக்குகள் பதிவானது.

 

1984 - ஏ.ஆர். முருகையா - (காங்கிரசு)
எட்டாவது மக்களவை தொகுதியில் 68.36% வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் கந்தசுவாமியை தோற்கடித்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முருகையா. பதிவான சுமார் ஆறு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் முருகையா 4.13 லட்சம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். கந்தசுவாமி இரண்டு லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். 1984 தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியில் 77.25% வாக்குப்பதிவு நடந்தது. இவருடைய மகன் தான் வாசன் முருகையா ரியல்எஸ்டேட் தொழிலும், இன்னோருவர் வாசன் கண் மருத்துவமனையும், வாசன் மெடிக்கல் தொழிலும் செய்து வருகிறார்.

 

t

 

1989 - மு. தம்பிதுரை - (அதிமுக)

1989 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை வென்றார். பதிவான 7.48 லட்ச வாக்குகளில் தம்பிதுரைக்கு 4.84 லட்ச வாக்குகள் கிடைத்தது. திமுகவின் கே.சி. பழனிசாமி 2.45 லட்ச வாக்குகள் பெற்றார். பாமக 3,679 வாக்குகள் பெற்றது. இந்த தேர்தலில் கரூரில் 71.21% வாக்குப்பதிவு நடந்தது.

 

1991 - என். முருகேசன் - (அதிமுக)

பத்தாவது மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகேசன் பதிவான ஏழு லட்சம் வாக்குகளில் 4.75 லட்சம் வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் திருநாவுக்கரசு 2.05 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாமிடம் பிடித்தார். பாமக 4,388 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தது.

 

1996 - கே. நாட்ராயன் - (தமாகா)

மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நட்ராயன் கரூரில் 56.12% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் தம்பிதுரை 2.41 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். மதிமுக சார்பில் போட்டியில் டி.பி.மூர்த்தி 8.38% வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளருக்கு ஒரு சதவீத ஓட்டு கூட கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் 71.20% வாக்குகள் பதிவாகியிருந்தது.

 

1998 - மு. தம்பிதுரை - (அதிமுக)

1998-ல் நடந்த மக்களவை தேர்தலில் காட்சிகள் மாறின. முந்தைய தேர்தலில் வென்றிருந்த நட்ராயன் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டார். தம்பிதுரை 43,673 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தேர்தலில் 59.84% வாக்குகள் பதிவாகியிருந்தது.

 

c

 

1999 - எம்.சின்னசாமி - (அதிமுக)

1999-ல் மீண்டும் மக்களவை தேர்தல் நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் சின்னசாமி வெறும் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியை வென்றார். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நட்ராயன் 6.33% வாக்குகள் அதாவது 45 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். இந்த தேர்தலில் 62.94% வாக்குகள் பதிவானது.

 

kc

 

2004 - கே. சி. பழனிசாமி - (திமுக)

இரண்டு முறை கரூர் மக்களவை தொகுதியில் தோல்வியைத் தழுவியிருந்த கே.சி.பழனிசாமி தனது 69-வது வயதில் 2004 மக்களவை தேர்தலில் கரூரில் வென்றார். இம்முறை அதிமுக வேட்பாளரை சுமார் 1.91 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

 

2009 - மு. தம்பிதுரை - (அதிமுக)

2009 மக்களவை தேர்தலில் .சுமார் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட தம்பிதுரை வென்றார். தேமுதிக வேட்பாளர் ராமநாதன் 51 ஆயிரம் வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

2014 - மு. தம்பிதுரை - (அதிமுக)

கடந்த 2014 மக்களவை தேர்தலிலும் தம்பிதுரை வென்றார். இம்முறை சுமார் 1.95 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சின்னசாமியை வீழ்த்தினார். தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணன் 76 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் நின்ற ஜோதிமணிக்கு 30 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. 13,733 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.

ஆறு முறை திமுக - அதிமுக நேரடியாக மோதியுள்ளன. இதில் ஒரே ஒரு முறை மட்டுமே திமுக வென்றது.

 

திமுக ஒரு முறை கரூரில் வென்றுள்ளது. 1989-லிருந்து தம்பிதுரை நான்கு முறை கரூர் மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்றம் சென்றிருக்கிறார். ஐந்தாவது முறையாக தேர்தலில் நிற்கும் தம்பிதுரை தற்போது தேர்தல் தேதி அறிவிப்புக்கு 2 மாதங்களுக்கு முன்பே களத்தில் இறங்கி கிராமம் கிராமாக சுற்றி மக்களின் குறைகளையும், கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார். பல இடங்களில் மக்கள் அடிப்படை வசதி செய்து தரவே இல்லை என மறிக்கவும் செய்கிறார்கள். ஆனாலும் கடந்த 4 முறை ஜெயித்தது போலவே இந்த முறையும் கண்டிப்பாக ஜெயித்து விடுவேன் என்கிற நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறார் தம்பிதுரை. 

 

j


இதுவரை ஆறு முறை காங்கிரஸ் கட்சி இங்கே வென்றுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இம்முறை கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஐந்தாவது முறையாக தம்பித்துரை தேர்தலில் நிற்கிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராகுகாந்தி சிபாரிசில் ஜோதிமணியை நிறுத்துகிறார்கள். அமுமுக சார்பில் தங்கவேல் என்பவரை நிறுத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே அமுமுக பொறுப்பாளர்கள் அதிமுகவில் மீண்டும் இணைந்த நிலையில் இவரை நிறுத்தியிருக்கிறார்கள். 

 

t

 

தற்போது கடைசி 10 வருடங்களாக கரூர் அ.தி.மு.க.வில் முக்கிய புள்ளியாக வலம் வந்த செந்தில்பாலாஜி தற்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பில் இருப்பதால் அவருடைய அரசியல் அதிரடியை நம்பியே கரூர் காங்கிரஸ் வேட்பாளர் இருக்க வேண்டிய நிலை என்பது தான் தற்போதைய களநிலவரம். 

 

s

 

காங்கிரஸ் வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலையில் செந்தில்பாலாஜி அனைத்து ஒன்றியங்களிலும், பூத்கமிட்டி அமைத்து 10 வாக்காளர்களுக்கு 2 பேர் என்கிற விகிதத்தில் ஆட்களை நியமித்து வேலையை துரிதப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள்.


 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.