கரூரை சேர்ந்த வழக்கறிஞர் திவாகர் (30). இவர் திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து அதில் அலுவலகம் மற்றும் வீடு போல் தங்கியும் வருகிறார். இவரது அலுவலகத்துக்கு கீழே குடியிருக்கும் கூலித்தொழிலாளி குமரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவரது மகள் அதேபகுதியில் உள்ள பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார். சிறு வயது முதலே படிப்பதற்காக வழக்கறிஞர் அலுவலகம் உள்ள மாடிபகுதியை படிப்பதற்கு பயன்படுத்துவது பழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அங்கே அலுவலகம் அமைக்க வாடகைக்கு வந்துள்ளார் திவாகர். அலுவலகத்திலேயே தங்கிக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் மாடிக்கு படிக்க வரும் மாணவியிடம் பேச்சு கொடுத்து பாடம் சொல்லித் தருவது போன்று பழக ஆரம்பித்துள்ளார்.
ஆரம்பத்தில் படிப்பு சொல்லி கொடுப்பது போன்று அடிக்கடி பேசியவர் தேர்வு நேரத்தில் அவ்வப்போது சீண்ட ஆரம்பித்திருக்கிறார். தனக்கு கணக்கு பாடம் நன்றாக தெரியும் என்றும், கணக்கு தேர்வுக்கு சொல்லித் தருவதாகவும் கூறி, உச்சக்கட்ட பாலியல் வன்மத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடமிருந்து தப்பிய அந்த மாணவி, இதனை வெளியே சொன்னால் பிரச்சனை பெரிதாகிவிடும். அதே நேரம் தேர்வு எழுவதில் சிரமம் ஏற்படும் என்று நினைத்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் தனது உறவினரின் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி தேர்வை எழுதி முடித்து விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்.

ஆனால், அந்த வழக்கறிஞரோ மாணவி எதையும் காட்டிக்கொள்ளவில்லை. அதானால் எந்த பிரச்சனையும் இல்லை என்கிற தைரியத்தில் மாணவி குளிக்கும் நேரம் பார்த்து குளியலறை உள்ளே குதித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி என்ன செய்வது என்றே தெரியாமல் சத்தம் போட்டு அலறியிருக்கிறார். ஆனால், வழக்கறிஞர் திவாகர் அந்த மாணவியை செல்போனில் படம் பிடித்திருக்கிறார்.
இதற்கு மேல் இந்த கொடுமைகளை பொறுக்க முடியாமல் தனது தாயிடம் முறையிட, மாணவியின் தந்தை பாலக்கரை போலீஸாரிடம் புகார் அளித்தார். இதன் பின்னர் வழக்கு விசாரணை கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றது. சம்மந்தப்பட்ட பெண்ணை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். வழக்கறிஞர் திவாகர் மீது வழக்கு பதிவு செய்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் திவாகர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் திவாகர் ஜாமீன் மனு திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவருக்கு எதிராக மக்கள் அதிகார அமைப்பு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் நீதிமன்றத்தில் திவாகர் மீது பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினர் சார்பில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி புகார் கொடுத்தவர்களிடம் நேரடியாக விசாரணை செய்து விட்டு முதல் முறையாக ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்தார்கள் திவாகரன் தரப்பு வழக்கறிஞர்கள். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்த போது வழக்கறிஞர் திவாகரன் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ஆதிநாராயணனிடம் பேசினோம். அவர்கள் அந்த பெண்ணை அந்த வழக்கறிஞர் செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார் என்று அந்த பெண் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வேலை ஜாமீனில் வெளியே வந்தால் அந்த வீடியோவை வைத்து அந்த பெண்ணை மிரட்ட வாய்ப்பு இருக்கு என்று நீதிபதியிடம் புகார் தெரிவித்தோம்.
உடனே போலிசை அழைத்து அந்த வீட்டை சோதனை போட உத்தரவிட்டு இரண்டாவது முறையாக அவனுடைய ஜாமீனை ரத்து செய்தார். இந்த திவாகரன் மீது ஏகப்பட்ட பிரச்சனை உள்ளது. இது குறித்து எல்லாம் புகார் கொடுத்திருக்கிறோம் என்றார்.
இன்னும் போலிஸ் தீவிரமாக விசாரித்தால் இன்னும் பல உண்மை வெளியே வரும். அவரால் பாதிக்கப்பட்ட பல அப்பாவி பெண்கள் இருக்கிறார்கள் என்றார்.
இதற்கு இடையில் கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் வீட்டில் சிடி, வீடியோ அடங்கிய தகவல் எதுவும் இருக்கிறதா என்று சோதனை போட்டனர் என்பது குறிப்பிட்டதக்கது.