Skip to main content

’ஐம்பது வருடமாக நான் அரசியலில் இருக்கிறேன்... இப்போதுதான் ராகுல்காந்தி என் பெயரைச் சொல்லி கூப்பிடுகிறார்’-அழகிரி 

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

 

கரூர் பாராளுமன்றத் தொகுதியை திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியதால் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி களத்தில் குதித்திருக்கிறார்.    இந்த   கரூர் பாராளுமன்ற தொகுதியில் கரூர் மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியும் சேர்த்து ஆறு சட்டமன்ற தொகுதி  கொண்டதுதான் கரூர் பாராளுமன்ற தொகுதி.

 

a


    இந்த  பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூர் தொகுதியில் உள்ள குஜிலியம்பாறையில்
தான் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.   இக் கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும்,  ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி தலைமை தாங்கினார்.  இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான அழகிரி கலந்துகொண்டு கரூர் வேட்பாளரான  ஜோதிமணிக்கு வாக்கு சேகரித்தார்.  

 

 அதன்பின் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  தலைவரான அழகிரி,  ’’ஐம்பது வருடமாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். இப்போதுதான் தலைவர் ராகுல் காந்தியே என் பெயரைச் சொல்லி கூப்பிடுகிறார்.  அப்படி இருக்கும்போது இந்த ஊரில்  இருந்து கொண்டு தலைவர் ராகுல் காந்தியுடன் நட்பையும் பழக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார் என்றால் அதற்கு  ஜோதிமணியின் உழைப்புதான் காரணம்.  அதனாலதான் இப்பவே ஜோதிமணி வெற்றி பெற்றார் என்று சொல்கிறேன்.   ஆனால் நாடே பணத்தை நம்பி இருக்கிறது.  ஜனநாயகம் மாறி பணநாயகமாக வந்துவிட்டது.   எனக்கு பயம் தம்பிதுரையிடம்  பண பலமும் அதிகார பலம் இருக்கிறது.  அதோடு பிஜேபியும் இருப்பதால் பணத்தை வாரி இரைபார்கள் என்ற அச்சம் இருந்தது.   ஆனால் இங்கு வந்த  பெண்களின் கூட்டத்தைப்  பார்த்த போது ஜோதிமணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

 

a

 

எங்கள் தலைவர் ராகுல் தேர்தல் அறிக்கை வெளியிட்டார் . அதில் இரண்டு கோரிக்கைகளை மட்டும் உங்களிடம் முன்வைக்கிறேன்.  ஒன்று வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் மாதம் 6000 ரூபாய் கொடுக்கப்படும் என்றும்  நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.  இப்படி மக்களின் நலனுக்காக தேர்தல் அறிக்கை மூலம் பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார்.  அதை தலைவர் ராகுல் பிரதமராக வருவதின் மூலம் நிறைவேற்றியும் கொடுப்பார் என்று கூறினார்.  இக்கூட்டத்திற்கு வடக்கு தெற்கு ஒன்றிய செயலாளர்களான கவிதா பார்த்திபன், சாமிநாதன், முன்னாள் எம்எல்ஏ வெள்ளைச்சாமி உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்