![karthi](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wyomq34mCjVwyBlbSPJLaFRH5maEUYpydRWhGpwQN-I/1533347656/sites/default/files/inline-images/karthi.jpg)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் அமலாக்கத்துறையினாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டுக்கான அனுமதியை பெற்றுத்தந்ததில் முறைகேடு என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் கீழ் பாஸ்கர் ராமனை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை.
ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த கடந்த 2007ம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் 307 கோடி ரூபாயை வெளிநாட்டு முதலீட்டைப்பெற அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய அனுமதி அளித்ததில் பெரிய அளவில் முறைகேடு என்று சிபிஐ குற்றம்சாட்டியது. மேலும், கார்த்திசிதம்பரம்தான் அந்த நிறுவனத்திற்கு அனுமதி பெற்றுத்தந்தார் என்றும் சிபிஐ குற்றம் சுமத்தியது. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டில் மே மாதம் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது சிபிஐ. இதனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.
இதற்கு எதிராக கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேற்கொண்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வரும் 28-ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும், வெளிநாட்டில் கார்த்தி சிதம்பரம் தங்கும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை சி.பி.ஐ.க்கு அளிக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளுடன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர் உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு. மேலும் இவ்வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை.