Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்- மத்திய ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை!

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவுக்குள் 50,000 அடியை எட்டும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால், காவிரி பகுதிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

KARNATAKA STATE HEAVY RAIN METTUR DAM WATER RAISED ALERT MINISTRY OF JALSHAKTI


மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை இன்று காலை எட்டிய நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27,500 கனஅடியாக உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் அலர்ட்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Bird flu alert for 5 districts!

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன.

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார். 

இந்த நிலையில், ஆந்திரா மாநிலத்திற்கு அருகில் உள்ள 5 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் அலர்ட் விடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆந்திர மாநிலம் நெல்லூரில் கடந்த 17 ஆம் தேதி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்துள்ளது. அதனால், அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.