உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு காவேரி உரிமைக்காக நமது பகுதியில் கடையடைப்பு நடத்துவது தேவையற்றது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரி, “காவிரியில் தமிழகத்துக்கு உரிமை 70 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. ஆனால் படிப்படியாக குறைந்து தற்போது 40 சதவீதத்திற்கும் கீழ் சென்றுவிட்டது. காவேரி உரிமைக்காக நமது பகுதியில் கடையடைப்பு நடத்துவது தேவையற்றது, கர்நாடகாவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். காவிரி விஷயத்தில் கர்நாடகாவில் திரைப்பட நடிகர்கள் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அதுபோல் இல்லை” என்றார்.
இதனைத் தொடர்ந்து லியோ படத்தின் ட்ரைலரில் விஜய் பேசிய வார்த்தை குறித்து பேசிய அவர், “தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தை பேசுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் விஜய் பேசியிருப்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மங்காத்தா சினிமாவில் அஜித் கூட பேசி உள்ளார். இந்தச் செயல் இயக்குநரின் தோல்வியை காட்டுகிறது.” என்றார்.