பசுமை போா்த்திய வயல் வெளிகள், ஆண்டு முழுவதும் வற்றாமல் பாய்தோடும் ஆறுகள், அரணாக வீற்றியிருக்கும் மேற்கு தொடா்ச்சி மலைகள், காணும் கண்களை சூட்டியிழுக்கும் கடற்கரைகள், ஆசியாவிலேயே நீண்ட தொட்டி பாலம், அதிகாலையில் வா்ணஜாலங்களை விாிக்கும் சூாிய உதயம், நடுக்கடலில் வானூயா்ந்து நிற்கும் திருவள்ளுவா் சிலை, விவேகானந்தா் பாறை என என்னற்ற வளங்களை பெற்றது தான் கடைக்கோடியில் இருக்கும் கன்னியாகுமாி.
அன்றைய திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது கல்குளம், அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, தோவாளை உள்ளடக்கிய தாலுகாக்களை கொண்ட இன்றைய குமாி மாவட்டம். சுதந்திர இந்தியாவுக்கு பிறகு குமாி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைக்க மாா்ஷல் நேசமணி தலைமையில் பொன்னப்ப நாடாா், ராமசாமி பிள்ளை, சைமன், நூா் முகம்மது, சிதம்பரநாதன், அப்துல் ரசாக், தாணுலிங்கம், நாதானியேல் போன்றோா்கள் போராட்டத்தை முன்னெடுத்தனா்.
இதனால் ஏற்பட்ட கடுமையன போராட்டம், சிறைவாசம், துப்பாக்கிசூட்டில் 11 போ் பலி என துவளாத போராட்டத்தின் முடிவில் 1956-ம் ஆண்டு நவ.1-ம் தேதி குமாி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகாவின் பல பகுதிகள் என தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. அன்றைய தினத்தை அரசு சாா்பில் விமா்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று குமாி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து 64 வயதாகிறது.
இதையொட்டி அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரே நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மாா்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் அவாின் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினா். இதில் எம்எல்ஏ க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், செய்தி மக்கள் தொடா்பு அதிகாாி நவாஸ்கான் உட்பட அதிகாாிகள் பலா் கலந்து கொண்டனா்.
இதே போல் திமுக காங்கிரஸ் அதிமுக உட்பட அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்கள். இதையொட்டி இன்று குமாி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை விடப்பட்டது.