Published on 15/09/2019 | Edited on 15/09/2019
சென்னை பள்ளிக்கரணையில் அரசியல் பிரமுகர் வைத்திருந்த திருமண வரவேற்பு பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் விபத்துக்குள்ளாகி இறந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் இனி வரவேற்பு பேனர்கள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் குரோம்பேட்டையில் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இது குறித்து குறிப்பிட்ட கமல்ஹாசன், பேனர் கலாச்சாரத்தை ஒழியுங்கள் அப்படி ஒழிக்கவில்லை என்றால் இந்த கலாச்சாரத்தை மக்களே ஒழிப்பார்கள் அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும் என்றார். அதேபோல் பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் ஓடி ஒளிய முடியாது எனவும் கூறினார்.