Published on 10/05/2018 | Edited on 11/05/2018

’’ஸ்மார்ட் ரிங்( கணையாழி) என்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்பினை மேற்கொண்டு முடித்த தமிழக இளைஞர்கள் நால்வரை இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். இச்சந்திப்பின்போது அவர்களின் புதிய கண்டுபிடிப்பு குறித்து தெரிந்துகொண்டு, புதிய தொழில்நுட்பம் மூலம் ஆபத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் வழிகுறித்து கேட்டறிந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
