Skip to main content

கமல்ஹாசன் நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Kamal Haasan is fine - hospital

 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இந்தியன் 2 படப்பிடிப்பிலும், 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சிப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 

 

இந்நிலையில், காய்ச்சல் காரணமாக நடிகர் கமல்ஹாசன் நேற்றிரவு (23/11/2022) சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்