Skip to main content

திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை ஊருக்குள் வெள்ளம் - மக்கள் உற்சாகம்

Published on 14/09/2017 | Edited on 14/09/2017
திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை
ஊருக்குள் வெள்ளம் - மக்கள் உற்சாகம்



திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை பலத்தமழை - 15ஆண்டுகளுக்கு பிறகு ஊருக்குள் வெள்ளம் -மக்கள் உற்சாகம் மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அன்று அதிகாலை 3மணிக்கு பலத்த மழை பெய்தது.

இந்நிலையில் தொடர்ந்த 3மணிநேரத்திற்கு மேல் பெய்த மழையால் கள்ளிக்குடி அருகே உள்ள சிவரக்கோட்டை, செங்கப்படை, கரிசல்கலாம்பட்டி, வடக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்த ஓடியதில் வடக்கம்பட்டி கண்மாய் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. 15ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் ஊருக்குள் புகுந்து வெளியெ சென்றதால் மக்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.

இக்கிராமத்தில் பெரும்பாலானோர் வெளியூர்களில் வசித்த வருவதால் கிராமத்தில் நடைபெற்ற பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஏராளமானோர் வந்திருந்தனர். இந்நிலையில் வெள்ளம் தங்கள் வீட்டின் அருகே வருவதைக்கண்டு உற்சாகமடைந்தனர். பின்னர் ஊருக்குள் வந்த வெள்ளத்தில் குளித்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். 

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் ஊருக்குள் வெள்ளம் வந்தது பாதிப்புதான் என்றாலும் 15ஆண்டுகளுக்கு பின்பு வெள்ளம் வந்ததால் மகிழ்சியாக உள்ளதாக தெரிவித்தனர்.

-முகில்

சார்ந்த செய்திகள்