Published on 26/12/2018 | Edited on 26/12/2018

வரும் ஜனவரி 2ஆம் தேதி தமிழக சட்டமன்றப் பேரவை கூடுகிறது. அதில் முதல் தீர்மானமாக மறைந்த திமுக தலைவர் கலைஞர் குறித்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். இதேபோல் மறைந்த அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் குறித்தும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.
வழக்கமான இரங்கல் தீர்மானமாக இருந்தாலும், குளித்தலை தொகுதியில் முதல் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலைஞர், தொடர்ந்து நடந்த அத்தனை சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்து குறித்தும், அவரது செயல்பாடுகள் குறித்தும் அதிமுக அரசின் சபாநாயகர் தீர்மானம் வாசிப்பது குறிப்பிடத்தக்கது.