Skip to main content

கலைஞருக்காக மெரினாவில் இடம் ஒதுக்கப்படுமா? காலை 8.30 மணிக்கு தீர்ப்பு

Published on 08/08/2018 | Edited on 08/08/2018
kalaignar


திமுக தலைவர் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது செவ்வாய்க்கிழமை இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. 
 

 

 

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டிற்கு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் வருகை தந்தனர். திமுக தரப்பில் சண்முக சுந்தரம், வில்சன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். 
 

 

 

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் விசாரணை நடத்தினர். மெரினாவில் கலைஞர் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை அரசு பதில் மனு தாக்கல் செய்தவுடன் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்