Published on 18/09/2018 | Edited on 18/09/2018
![radharavi](http://image.nakkheeran.in/cdn/farfuture/VcEO2h5nTBya_ls9UbVe4u1o5reXwUGvDAYb-a7gAE4/1537296412/sites/default/files/inline-images/radharavi_59.jpg)
கலைஞருக்கு கலை வணக்கம் நிகழ்ச்சியில் பேசிய ராதாரவி, கரு.பழனியப்பன் கூறிய கருத்தை மறுத்து பேசினார். அப்போது அவர் கூறியது,
கரு. பழனியப்பன் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் நான் மறுக்கிறேன். அவர் கூறினார் புத்தகங்களை அவரது கல்லறையில் வைத்துவிடுங்கள். யாராவது வந்தால் படிப்பார்கள் என்று. அது தப்பான இடம், அது பீச் பகுதி யாராவது சுண்டல் மடிக்க எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். நீங்கள் சொன்னிங்களே யாராவது வந்தால் படிப்பார்கள் என்று அதைத்தான் ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார் என்பதற்காகத்தான் சொல்கிறேன். தன்னைப் பார்க்க வருபவர்கள் பொன்னாடைகள் கொண்டுவரவேண்டாம். புத்தகங்களைக் கொண்டு வாருங்கள் என்றார். அந்தப்புத்தகங்களை நூலகத்திற்கு அளித்துவிடுகிறார்.