
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கு, 192 டி.எம்.சி. நீர் என்பதை 14.75 டி.எம்.சி.யாக தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நதிகள் தேசிய சொத்து, 24,24,708 லட்சம் பாசனப்பரப்பு தமிழகத்தில் உள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காவிரி நதியை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது ஆகியவை உச்சநீதிமன்ற தீர்ப்பில் வரவேற்புக்குரிய அம்சங்கள்.
சட்டபோராட்டத்தின் மூலமாக ஜெயலலிதாவால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தான் தற்போது தமிழகத்திற்கு நீதி வழங்கபட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து தீர்வுக்கானப்படும். பல ஆண்டுகளாக எதிர்ப்பார்த்த காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழு 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பின் உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்.
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தொழிற்சங்கங்களை அழைத்து பேசி முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.