திருவாரூரில் கஜாபுயலில் சாய்ந்த தேக்கு மரங்களை திருடி மத்தியபல்கலைகழத்தில் பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் துணைபதிவாளருக்கு தொடர்பு இருப்பு உள்ளது என அவரிடம் இருந்த 5 பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே நீலக்குடியின் வெட்டாற்றின் கரையில் கஜா புயலால் சாய்ந்த தேக்கு மரங்கள் திருடப்பட்டிருந்தது . மேலும் அந்த மரங்கள் அப்பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய பல்லைகழகத்தில் உள்ள புதர்மண்டிய பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருவாரூர் வனத்துறைக்கு தொலைபேசியில் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மத்திய பல்கலைகழகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அங்கு தேக்கு மரங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
தேக்குமரங்களை மத்திய பல்கலைகழத்திற்குள் செல்ல வாயிற்காவலர்களரின் அனுமதியின்றி எடுத்து செல்ல முடியாது என்பதால் வனத்துறை அதிகாரிகள் வாயிற் காவல்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில், "பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளரான வேலு தேக்கு மரங்களை ஏற்றிவந்த டிரக்டரை உள்ளே அனுமதிக்க உத்தரவிட்டதாக" கூறி அதிர்ச்சியான தகவலைக்கூறினார்.
இந்நிலையில் மத்திய பல்கலைகழக பதிவாளர் புவனேஸ்வரி உத்தரவின் பேரில் பேராசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே துணை பதிவாளர் வேலு வகித்த 5 கூடுதல் பதவிகள் பறிக்கப்பட்டு அப்பதவிகள் வேறு 5 நபர்களிடம் ஒப்பக்கப்பட்டது.
மேலும் கஜா புயலால் சாய்ந்த, முறிந்த மரங்கள் உரிய முறையில் மீட்கப்படாமல் அலட்சியம் காட்டிவருவதாகவும், முறையான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிடவேண்டும் என்கிறார்கள் திருவாரூர் மாவட்ட சமுக ஆர்வலர்கள்.