Skip to main content

தம்பித்துரையின் ஹாட்ரிக் வெற்றியை தடுத்து ஜெயித்த ஜோதிமணி

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

கரூர் பாராளுமன்ற தொகுதியில் 6,78,373 ஆண்கள், 7,08,196 பெண்கள் மற்றும் 67 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13,86,636 வாக்காளர்கள் உள்ளனர்.
 

 

இந்த தொகுதியில் கரூர், கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், விராலிமலை, மணப்பாறை, அரவக்குறிச்சி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
 

jothimani

 

அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் தம்பிதுரை, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அ.ம.மு.க. வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேல், மக்கள் நீதி மய்யம் கட்சியில் டாக்டர் ஹரிகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா உள்பட மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
 

 

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 10,97,024 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். ஆண்கள் 5,32,760 பேரும், பெண்கள் 5,64,233 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 31 பேரும் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். இது 79.11 சதவீதமாகும்.

 



வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

 



இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

 


அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் மற்றும் உதவியாளர் மற்றும் பணியாளர்கள் பணியில் இருந்தனர்.



முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 37,999 வாக்குகள் பெற்று முதலிடத்திலும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 15,033வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 4ம் சுற்று முடிவுகளில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் செல்வி ஜோதிமணி 22,966 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.


அடுத்த சுற்றுகளில் ஜோதிமணி 120558 தம்பிதுரை 49744 ஜோதிமணி 70814 வாக்குகள் முன்னிலை. 

காங்கிரஸ் ஜோதிமணி தொடர்ச்சியாக தேர்தலில் தோல்வியை சந்தித்தவர். தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தலில் ஏகப்பட எதிர்ப்பை சம்பாதித்தவர். தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு பணம் இல்லை என்கிற நிலை இருந்த போது. ராகுல்காந்தி சதாரண நிலையில் உள்ளவர்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுப்பது. ஜோதிமணி மாதிரி கட்சியின் களப்பணியார்கள் வெற்றிபெற வேண்டும் என்று இந்த முறை சீட்டு வழங்கப்பட்டது.

 



தொடர்ச்சி தோல்வியை சந்தித்துக்கொண்டிருந்த ஜோதிமணிக்கு அமமுகவில் இருந்து அணி மாறி திமுகவிற்கு செந்தில்பாலாஜி வந்தது பெரிய வரபிரசாம் எனலாம். தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றியை சுவைத்தவர் இந்த முறை ஹாட்ரிக் வெற்றி பெறுவேன் என்று தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருந்த துணை சபாநாயகர் தம்பித்துரையை செந்தில்பாலாஜியின் அரசியல் நேர்த்தியான வேலையினாலும், ஜோதிமணியின் நேர்மையான துணிச்சல் மிக்க பேச்சாலும் இந்தமுறை இளம் வெற்றி வேட்பாளர் ஜோதிமணியை இந்தியபாரளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள் கரூர் மக்கள். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்