Skip to main content

10 வயது சிறுவனைக் கருணைக்கொலை செய்ய மனு அளித்த பெற்றோர், கண்ணீர் சிந்திய நீதிபதி!!!

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
Euthanasia


 

கருணைக்கொலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் இன்று மருத்துவ அறிக்கை வெளிவந்துள்ளது. 
 

தொடல் வலிப்பால் மூளை பாதிப்படைந்த தங்களது 10 வயது  மகனை கருணைக்கொலை செய்யும்படி கடலூரைச் சேர்ந்த சிறுவனின் பெற்றோர் அளித்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மருத்துவ அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டனர். அதன்படி இன்று மருத்துவ அறிக்கை வந்தது. மருத்துவ அறிக்கையில் சிறுவனை குணப்படுத்தமுடியாது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை படித்த நீதிபதி கிருபாகரன் கண்ணீர் சிந்தினார், நீதிபதி பாஸ்கரன் கவலை அடைந்தார். அந்த சிறுவனின் பெற்றோர்களுக்கு மாதந்தோறும் மருத்துவ மற்றும் நிதி உதவிகளை வழங்க முடியுமா, இதுபோன்ற சிறுவர்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் ஏன் திட்டம் வகுக்கக்கூடாது என்று கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 23 க்கு ஒத்தி வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்