ஜீவசமாதி அடைய 3வது நாளாக
சிறையில் முருகன் உண்ணாவிரதம்!
சிறையில் முருகன் உண்ணாவிரதம்!
ராஜூவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகும் சிறை விதிகளை மீறி முருகன் உண்ணாவிரதம் இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜீவசமாதி அடைவதற்காக கடந்த 18-ம் தேதி தனது உண்ணாவிரதத்தை முருகன் தொடங்கினார். சிறையில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன் அறைக்கு தனி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் ஈடுபட்டால் சிறைத்துறை சலுகைகள் குறைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.