
சென்னை மாதவரத்தில் மசாஜ் செய்வதாக கூறி தொழிலதிபரிடம் 5 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த இரண்டு பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை மாதவரத்தை அடுத்த பெரியாமாத்தூரை சேர்ந்த நிர்மலா என்ற பெண் வீட்டிலேயே மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு மசாஜ் செய்வதற்கு அழைப்பின் பேரில் கொடுங்கையூரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்றதாக கூறப்படுகிறது.


அப்போது நிர்மலா ஐந்து ஆண்களையும், ஷீலா என்ற பெண்ணையும் நண்பர்கள் என அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் காலை வீட்டிற்குச் சென்ற தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி தன் 5 சவரன் தங்கச் செயின் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. அதேபோல் தன்னிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் காணவில்லை என்பதையும் உணர்ந்தவர் அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.


இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நிர்மலா, ஷீலா, ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன், கார்த்திகேயன், லட்சுமணன், அருண்குமார் மற்றும் மணி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.
மசாஜ் சென்டர் என்ற பெயரில் மதுவிற்கு அடிமையாக்கி பணம், நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.