Skip to main content

ஜெயலலிதா புதிய சிலை திறப்பு - படங்கள் 

Published on 14/11/2018 | Edited on 14/11/2018


    
சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலை கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி திறக்கப்பட்டது. 7 அடி உயரத்தில் திறக்கப்பட்ட இந்தச் சிலை ஜெயலலிதா முகபாவனையில் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 
 

இதைத்தொடர்ந்து, புதிதாக ஜெயலலிதா சிலை வடிவமைக்கும் பணி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியை சேர்ந்த சிற்பி ராஜ்குமாரிடம் அதிமுக தலைமையால் வழங்கப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையிலான வெண்கலத்தில் ஜெயலலிதா சிலை கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
 

இந்நிலையில் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று காலை 9.30 மணியளவில் திறக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் புதிய சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்