Skip to main content

திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட ஜெயக்குமார்

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

Jayakumar signed at the Trichy police station

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, 49 வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், நில அபகரிப்பு செய்ததாகவும் அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் மூன்று வழக்குகளிலும் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

 

திருச்சியில் 2 வாரங்கள் தங்கி இருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் 12ம் தேதி காலை புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த  திங்கள்கிழமை முதல் கையெழுத்திட்டார். தொடர்ந்து இன்று புதன் கிழமை கன்டோன்மென்ட் உதவி ஆய்வாளர் அகிலா முன்னிலையில் இரண்டாவது கையெழுத்து இட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்