சென்னை புழல் சிறையின் விசாரணை கைதிகளுக்கான பிரிவின் ஜெயிலர் ஜெயராமன் லஞ்ச வழக்கிற்குப்பின் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரசாயனம் தடவிய 40 ஆயிரம் ரொக்கப்பணத்தை சிறை வார்டன் பிச்சைய்யா லஞ்சமாக பெற்றதை அறிந்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த லஞ்சத்தொகைக்கு ஜெயிலர் ஜெயராமனுக்கும் தொடர்புள்ளது, அவர்தான் வாங்கிவரச் சொன்னார் என தெரியவந்தது.
மேலும் வார்டனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில், சிறையிலுள்ள மஹீம் அபுபக்கர் என்ற கைதியை பூந்தமல்லி பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு மாற்றுவதாக இருந்தது. அப்படி மாற்றப்படாமல் இருக்கவேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகை வேண்டுமென ஜெயிலர் ஜெயராமன் கைதியிடம் லஞ்சம் கேட்டார். மேலும் அவர் கேட்ட லஞ்சத்தொகை 40 ஆயிரத்தில் அவருக்கு 20 ஆயிரம் தனக்கு 20 ஆயிரம் எனவும் கூறி என்னை வாங்கிவர சொன்னார் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வார்டன் பிச்சைய்யா மேல் லஞ்ச ஊழல் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் குற்றம் சுமத்தப்பட்ட ஜெயிலர் ஜெயராமன் மீது துறை ரீதியிலான நடடிக்கை கூட எடுக்கப்படவில்லை.
சிறையில் சட்டவிரோத முறையில் கஞ்சா, செல்போன் என கமிஷன் வாங்கினோடு சலுகைகள் வழங்கியதாக லஞ்ச புழல் சிறையில் நடந்த சட்டவிரோத நிகழ்வுகளை ஒழிப்புத்துறை அதிகாரி மஞ்சுநாத் சிறைத்துறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம் ஜெயிலர் ஜெயராமனின் கைகளில் கிடைக்க, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியான மஞ்சுநாத்தை இடமாற்றம் செய்வேன் எனவும் சவால் விட்டார் எனவும் கடந்த வாரம் மஞ்சுநாதா இடமாற்றம் செய்யப்பட்டதற்கு இவர்தான் காரணம் எனவும் கூறப்பட்டு வந்தது.
மேலும் அவர் மூத்த அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினர் எனவே தற்போது ஜெயிலர் ஜெயராமன் கண்துடைப்பிற்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளது.