Published on 31/01/2019 | Edited on 31/01/2019
9 நாட்களாக நடந்த ஜாக்டோ-ஜியோ போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 9 நாளுக்கு ஊதியம் கிடையாது என்று அரசு சொல்லி விட்டது.
அந்தவகையில் ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ. 5000 - ரூ.20000 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், முன்னதாகவே கருவூலத்தில் இருந்து சம்பள பட்டியல் விபரம் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வங்கி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட கருவூல ஊழியர்கள் வேறு பட்டியல் அனுப்பிவைப்பதாகவும், அதுவரை ஊதியம் பட்டுவாடா செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.
இதனால் மாத கடைசியான இன்று பல்வேறு துறைகளில் சம்பளம் பட்டுவாடா செய்யவில்லை. அதேபோல் போலீஸாருக்கும் சம்பளம் போடவில்லை.
இதை ஆதங்கமாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட் பண்ணி காவல்துறையினர் பதிவிட்டு வருகின்றனர்.