Published on 03/07/2019 | Edited on 03/07/2019
டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகதத்தில் இருந்து தேர்தலுக்கு முன்னரே செந்தில்பாலாஜி தேர்தல் தோல்விக்கு பிறகு தங்கத்தமிழ்செல்வன், இசக்கி சுப்பையா என முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெவ்வேறு கட்சிகளுக்கு பிரிந்துசென்ற நிலையில், தற்போது கர்நாடக பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து ஆலோனை நடத்தியுள்ளார்.
![ttv](http://image.nakkheeran.in/cdn/farfuture/8h6mft7_UbMewV2u_EC9V3Na4wKtpWqMR-5ZSvwHAjM/1562141769/sites/default/files/inline-images/dinakaran-ttv-13-20-1487589253.jpg)
இந்த சந்திப்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய நிர்வாகிகளின் பட்டியலை சசிகலாவிடம் காட்டி அதுகுறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.