Skip to main content

ரூபாய் நோட்டில் ஐயப்பனுக்கு அலங்காரம்!

Published on 12/12/2021 | Edited on 12/12/2021

 

IYAPPAN TEMPLE MONEY DECORATION PEOPLES

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ளது ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் வாணியம்பாடி மற்றும்  சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் தினந்தோறும் கோயிலுக்கு வருகை தந்து ஐப்பசி மாதம், கார்த்திகை மாதங்களில் மாலை போட்டுக் கொள்வார்கள். சபரிமலை செல்ல இந்த கோயிலில் வந்து இருமுடி கட்டிக்கொண்டு கோவிலுக்கு செல்வது வழக்கம்.

 

கார்த்திகை மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டிசம்பர் மாதம் 11- ஆம் தேதி கார்த்திகை மாதம் 4- வது சனிக்கிழமை என்பதால், ஐய்யப்பன் சிலைக்கு சொர்ண அலங்காரம் பூஜைக்காக சுமார் 10 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம், 500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தினர். இதில் ஐய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

 

முழுக்க ரூபாய் நோட்டுக்களில் செய்யப்பட்ட அலங்காரத்தைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்