Skip to main content

“உரிமைக் குழு நோட்டீஸை ரத்து செய்தது தவறு” - உயர் நீதிமன்றம் அதிரடி!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
It was wrong to cancel the rights committee notice High Court

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு முன்பு குட்காவுடன் வந்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள், ‘தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அதிகரித்துள்ளது’ எனக் குறி முழக்கம் எழுப்பினர். இந்த விவகாரம் குறித்தும், சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக தெரிவித்தும் சட்டப்பேரவை உரிமைக்குழு சார்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை உரிமைக்குழு சார்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்தும் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு நோட்டீஸில் தவறுகள் இருந்தால் அதனை திருத்தி அனுப்பலாம். ஆனால் நோட்டீஸை ரத்து செய்ய முடியாது எனத் உத்தரவிட்டிருந்தது இதையடுத்து உரிமைக்குழு சார்பில் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நோட்டீஸை ரத்து செய்வதாக அறிவித்தது. அதே சமயம் இந்த நோட்டீஸை அனுப்பியதை ரத்து செய்ய முடியாது என கூறி சட்டப்பேரவை உரிமைக்குழு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எஸ். எம். சுப்பிரமணியன் அமர்வில் நடைபெற்று வந்தது. கடந்த முறை விசாரணைக்கு வந்த போது நீதிபதி, “இந்த வழக்கை வாபஸ் பெற எதன் அடிப்படையில் முடிவெடுத்தீர்கள். எதன் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது” கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ராமன், “சட்டமன்றத்தில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளுக்கு சபாநாயகர் தான் முடிவெடுக்க முடியும். இது தொடர்பாக சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது” என வாதிட்டார். அப்போது நீதிபதி, “சட்டமன்றமாக இருந்தாலும், நீதி நீதிமன்றமாக இருந்தாலும் தனித்தனி அமைப்புகளாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் தலையிட முடியாவிட்டாலும் இதில் இறுதி முடிவு எடுக்கப்படாத சூழலில் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக முடிவு எடுப்பது தவறு. இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாமல் எதன் அடிப்படையில் வாபஸ் பெறுவதாக முடிவு எடுக்கப்பட்டது. உரிமைக் குழு நோட்டீஸை ரத்து செய்தது தவறு” எனக் கேள்வி எழுப்பினார். இவ்வாறு இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பின் தேதியை குறிப்பிடப்படாமல் நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார். 

சார்ந்த செய்திகள்