Skip to main content

இ-சேவை மையங்களை தனியாருக்கு தாரைவார்க்காதே! உண்ணாவிரதப் போராட்டம்

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

 


பொதுமக்களின் சேவையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு இ-சேவை மையங்களை தனியாருக்கு வார்க்கக்கூடாது என வலியுறுத்தி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமையன்று யூனியன் ஆப் ஐ.டி, ஐ.டி.இ.எஸ் எம்ப்ளாயீஸ் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 

 

வருமானம், பிறப்பு, இறப்பு, சாதி, ஆதார் உள்ளிட்ட பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை சான்றிதழ் வழங்கும் பணியை இ-சேவை மையங்கள் மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய ஊழியர்களுக்கு கேரள மாநிலத்தில் மாதம் ரூ.24 ஆயிரம் வழங்கும் நிலையில் தமிழகத்தில் வெறும் ரூ.7675 மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக இயங்கிவரும் இம்மையங்களை தமிழக அரசு தற்பொழுது தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவில் உள்ளது.

 

it

 

எனவே, அரசு இ-சேவை மையங்களை மூடக்கூடாது. தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது. பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களிடம் சட்ட விரோதமாக பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 

 

போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். போராட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட நிர்வாகி ஏ.ஸ்ரீதர் உரையாற்றினார்.  நிர்வாகிகள் எம்.ஜியாவுதீன், சி.மாரிக்கண்ணு, எஸ்.யாசிந்த் ஆகியோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர். கோரிக்கைகளை விளக்கி சங்க நிர்வாகிகள் செல்வம், கனகா, முருகேசன், முருகானந்தம் உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட் தலைவர் க.செல்வராஜ் உரையாற்றினார். 
            
 

சார்ந்த செய்திகள்