கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - சேலம் ரயில்வே பாதையில் கூத்தக்குடி ரயில் நிறுத்தம் உள்ளது.
இந்நிலையில் விருத்தாசலம் - சேலம் பேசஞ்ஜர் ரயில் நேற்று பகல் 02:05 மணியளவில் கூத்தக்குடி ரயில் நிறுத்தம் அருகே வந்தபோது மர்ம நபர்கள் தண்டவாளத்தில் எஸ் வடிவ ஊக்கை உடைத்து தண்டவாளத்தில் மீது வைத்திருந்தனர்.
இதனை பார்த்த ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தி ஊழியர்களிடம் கூறியதை தொடர்ந்து, ஊக்கை சீரமைத்து ரயிலை அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார், கடலூர் எஸ்.பி., சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ததில், ஒரு கி.மீ., தூரத்திற்கு 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஊக்கை சேதப்படுத்தியது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து அவ்வழியில் ரயில்கள் மெதுவாக செல்ல அறிவுத்தினார்கள். பின்னர், இன்று நள்ளிரவில் வந்த சேலம் இருப்பு பாதை டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். தண்டவாள ஊக்குகள் உடைக்கப்பட்டது தானாக நடந்ததா? அல்லது ரயிலை கவிழ்க்க சதியா...? என அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.