நெல்லை மாவட்ட கலக்டர் அலுவலக வளாகத்தில் நெல்லை பத்திரிகையாளர் மன்றம் செயல்பட்டு வருகிறது. இன்று காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் சஞ்சய்தத் 13 ஆம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரி வருவது தொடர்பாக பத்திரிகையளர்களை சந்திப்பு நடத்தினார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது என்று நெல்லை மாநகராட்சி ஆணையர் மாவட்ட கலக்டர் சில்பாவிடம் புகார் செய்தார். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் நெல்லை பறக்கும்படை தாசில்தார் கனகராஜ் பத்திரிகையாளர் சந்திப்பு மன்றத்தை பூட்டி சீல் வைத்தார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான பத்திரிகையாளர்கள் இதுவரையிலும் நடந்த தேர்தல் காலங்களின் போது இதுபோன்ற அரசியல் கட்சியினரின் பத்திரிகையாளர்களின் சந்திப்பு நடந்திருக்கிறது. அப்போதைய நேரத்தில் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை. இது பத்திரிகையாளர்களுக்கு நெருக்கடியானது என்று பத்திரிகையாளர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றி தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட கலக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, பத்திரிகையாளர் மன்றம் கலக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளது. அந்த மன்றத்தின் கட்டிடம் வருவாய் துறைக்கு சொந்தமானது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் இதுபோன்ற சந்திப்பை நடத்தியது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது அதன்காரணமாகவே சீல்வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
தேர்தல் முடியும்வரை பத்திரிகையாளர்கள் அனைவரும் கருப்பு பேஜ் அணிந்தவாறு பணியாற்றுவது என்று முடிவெடுத்துள்ளனர்.இந்தியாவில்