Skip to main content

திமுக முன்னோடிகளின் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

Published on 30/11/2017 | Edited on 30/11/2017
திமுக முன்னோடிகளின் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

திமுக செயல்தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கோவைக்கு வந்தார். திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமயின் தம்பி மகள் வித்தியா மறைவையொட்டி, ஜி.வி.ரெசிடென்சியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், வித்தியாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கு பொங்கலூர் பழனிச்சாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி, டாக்டர் வித்தியாவின் கணவர் டாக்டர் கோகுல் ஆகியோரிடத்தில் துக்கம் விசாரித்தார். 

இதைத்தொடர்ந்து, கோவை திருச்சி சாலை ஒலம்பஸ் பகுதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.மோகன், மற்றும் ராஜவீதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.இராமநாதன், இராம்நகரில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. ரா.சுப்பையன் ஆகியோர் இல்லங்களுக்கு சென்று நலம் விசாரித்தார். 

முன்னதாக கோவை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால்,  அனுமதிக்கப்பட்டிருந்த மாநகர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கார்த்திக் செல்வராஜின் மகன், கார்த்திக்கை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வின்போது, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, இராமச்சந்திரன், திமுக மாநில இளைஞரணி செயலாளர் வெள்ளகோவில் சாமிநாதன், மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் சி.ஆர்.இராமசந்திரன், தமிழ்மணி, முபாரக், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன்,  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அருள்

சார்ந்த செய்திகள்