தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விரல் ரேகை சரியாகப் பதிவு செய்ய முடியாத நபர்களுக்குக் கருவிழி மூலம் பதிவு செய்து ரேசன் பொருட்கள் வழங்குவதற்குத் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நியாயவிலைக்கடைகளுக்கு கண் கருவிழி பதிவு செய்யும் கருவி வழங்கும் விழா தாடிக்கொம்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தாடிக்கொம்பு பேரூராட்சி மன்றத்தலைவர் கவிதாசின்னத்தம்பி, கிழக்கு மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அகரம் பேரூராட்சி மன்றத்தலைவர் நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு கருவிழி பதிவு செய்யும் கருவியை வழங்கினார். அதோடு அங்கிருந்த பொதுமக்களிடமும் கருவிழி பதிவு செய்தும் காண்பித்தார்.
தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விரல் ரேகை சரியாகப் பதிவு செய்ய முடியாத நபர்களுக்குக் கருவிழி மூலம் பதிவு செய்து ரேசன் பொருட்கள் வழங்குவதற்குத் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நியாயவிலைக்கடைகளுக்கு கண் கருவிழி பதிவு செய்யும் கருவி வழங்கும் விழா தாடிக்கொம்பில் நடைபெற்றது.
ஒரு லட்சம் வீடுகள் இந்த வருடத்திற்கான இலக்காக இருந்தாலும் எவ்வளவு பேருக்கு விரைவாக வீடுகள் கட்டிக் கொடுக்க முடியுமோ அதன்படி எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பயனாளிகளுக்கு விரைவில் கட்டிக் கொடுக்கப்படும். மாதந்தோறும் மக்களைச் சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம். இடைத் தேர்தல் முடிந்த பின்பு அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார்.
அப்போது அங்குக் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். நிகழ்ச்சியில் துணைப் பதிவாளர் பொது விநியோகத்திட்டம் இரா.அன்புக்கரசன், பறக்கும்படை தாசில்தார் அபுரிஸ்வான், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செல்வக்குமார், கூட்டுறவு சார்பதிவாளர் அன்பரசு, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பொன்முருகன்,தாடிக்கொம்பு பேரூராட்சி எழுத்தர் மகாலிங்கம், மீனவரணி அமைப்பாளர் தாடிக்கொம்பு முருகேசன், தாடிக்கொம்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ரமேஷ், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர், சார்பு அணியினர் பலர் கலந்து கொண்டனர்.