Published on 26/03/2018 | Edited on 26/03/2018
சென்னை விருகம்பாக்கத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ. 33 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், லாக்கரில் இருந்த 133 பைகளில் இருந்த தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. வழக்கம்போல் இன்று காலை வங்கியை திறந்த அதிகாரிகள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் வங்கி ஊழியர்களிடமும், அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவையும் சோதனை செய்து வருகின்றனர். வங்கியில் பணம், தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.