கடந்த 2012- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29- ஆம் தேதி அன்று தொழிலதிபரும், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, திருச்சி மாவட்டம், தில்லைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த வழக்கில் எந்தவொரு துப்பும் கிடைக்காத நிலையில் தற்பொழுது இருவரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2012- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29- ஆம் தேதி அன்று தொழிலதிபரும், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான ராமஜெயம் கொலைசெய்யப்பட்டு அவரது உடல் திருச்சி காவிரி ஆற்றங்கரையோரம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இந்த கொலை யாரால், எதற்காக நிகழ்த்தப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்பொழுது வரை எந்த துப்பு கிடைக்கவில்லை. இக்கொலை குறித்த விசாரணையில் துப்புத் துலக்க சரியான தகவல்களை அளிப்பவருக்கு ரூபாய் 50 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையை சேர்ந்த எம்.எல்.ஏ எம்.கே பாலன் கடந்த 2000 ஆவது ஆண்டு கொலை செய்யப்பட்டபோது 16 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அந்த கொலையில் தொடர்புடைய திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில் குமார் ஆகியோரிடம் ராமஜெயம் கொலை குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.