Skip to main content

'இதுதான் எங்கள் அடுத்த இலக்கு'- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

 Interview with Health Minister Vijayabaskar

 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 

தமிழகத்தில் கரோனாவால் உயிரிழப்போர் விகிதத்தை 1.4 விகிதத்திலிருந்து 1.2 இறப்பு விகிதத்திற்கு கீழ் கொண்டுவந்துள்ளோம். இறப்பு விகிதத்தை ஒரு  சதவீதத்திற்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்பதே எங்கள் அடுத்த இலக்கு. தமிழகத்தில் கரோனாவைக் கண்டறிய ஆர்.டி -பி.சி.ஆர் பரிசோதனைகள் மட்டுமே செய்யப்படுகிறது. கரோனா தடுப்புப் பணிகளுக்கு ஆறு மாதங்களில் 831 கோடி செலவிடப்பட்டுள்ளது. கரோனா தடுப்புப் பணிக்குத் தேவையான நிதியை முதல்வர் அளித்துள்ளார். கரோனா தடுப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு 1,982 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்