அதிமுக கூட்டணியில் தேவேந்திரகுல சமூகத்தின் பிரதிநிதியாக மருத்துவர் கிருஷ்ணசாமி மற்றும் ஜான்பாண்டியன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் திருச்சியில் தீடீர் என தேவேந்திரகுல சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞரும் மக்கள் மறுமலர்ச்சி கட்சியின் தலைவரும்மான பொன்முருகேஷன் இன்று சந்தித்து ஆதரவை கொடுத்தார்.
திமுக கூட்டணியில் ஐஜேகே கட்சியின் பாரிவேந்தர் பெரம்பலூர் எம்.பி. தேர்தலில் போட்டியிடுகிறார். பாரிவேந்தரை ஆதரித்து இன்று பெரம்பலூரில் பிரச்சாரம் செய்ய திருச்சி வந்திருந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்தார் மக்கள் மறுமலர்ச்சி கழகம் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் பொன்முருகேசன்.
பிறகு நக்கீரனுக்காக அவரிடம் பேசிய போது...
இன்று திமுக தலைவரிடன் எங்களுடைய ஆதரவை தெரிவித்து ஒரு கோரிக்கையை வைத்தோம். தியாகி இம்மானுவேல் சேரன் பிறந்தநாளை அரசு விழாவா கொண்டாட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். முதல்வர் ஆனவுடன் உடனே அறிவிக்கிறேன் என்று உறுதி மொழி கொடுத்தார். தலைவர் ஸ்டாலின் இந்த அணுகுமுறையை நாங்கள் வரவேற்கிறோம்.
மறைந்த தலைவர் கலைஞர் அவர்கள் தேவேந்திரகுல மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்திருக்கிறார்கள். ஆனால் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களும், ஜான்பாண்டியன் அவர்களும் இந்த தேவேந்திரகுல மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார்கள். பட்டியல் வெளியேற்றம் என்கிற மாயையை ஏற்படுத்தி போலியான பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களை அம்பலபடுத்தி அவர்களை தோற்கடிக்கும் விதத்தில் எங்களுடைய பிரச்சாரம் இருக்கும்.
புதிய தமிழகம் கிருணஷ்சாமியும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஜான் பாண்டியனும் இந்த தேவேந்திர குல மக்களை தங்களது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள்,. ஒரு காலத்தில் கிருஷ்ணசாமியின் செல்வாக்கு குறையவும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினையில் தலையிட்டு அரசுக்கு எதிராக நடத்த போராட்டம் சுமூகமாக முடிந்த நேரத்தில் அதை முடிய விடாமல் தடுத்து மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களை படுகொலை செய்ய காரணமாக இருந்தவர் கிருஷ்ணசாமி.
ஜான் பாண்டியன் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் தமிழகத்தில் பசுபதி பாண்டியனின் செல்வாக்கு அதிகரிக்கவும், ஜான் பாண்டியன் செல்வாக்கு குறைந்துள்ளதை கண்ட. தனது பலத்தை நிருபிக்க பரமக்குடிக்கு செல்ல கூடாது என்று காவல்துறை தடை உத்தரவு போட்டும் தடையை மீறி பரமக்குடிக்கு சென்றதால் கலவரம் ஏற்பட்டு 7 அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள். இப்படி எங்கள் தேவேந்திரகுல மக்களை வஞ்சிக்கும் அவருடைய போலி பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணம் தென்காசியை பொறுத்த வரையில் புதியதமிழகம் கட்சியின் தலைவர் கிருஷண்சாமியை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம். எங்கள் பிரச்சாரம் தென்காசி மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் இருக்கும் என்றார்.