Published on 10/11/2019 | Edited on 12/11/2019
சென்னை தி நகரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதாக ரஜினி மட்டுமல்ல நானும் சொல்கிறேன். தமிழகத்தில் ஆளுமை கொண்ட சக்தியாக விளங்கிய கலைஞர், ஜெயலலிதா போல் தற்போது தலைவர்கள் இல்லை. திமுக ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பவில்லை. முரசொலி இடம் யாருக்கு சொந்தம் என்பது அதிகாரிகளைக் கொண்டு முதல்வர் வெளிப்படையாக காண்பிக்க வேண்டும். பஞ்சமி நிலம் வைத்திருப்பதை போன்ற பெரும் பாவச் செயல் வேறு எதுவும் இல்லை என்றார்.