Published on 12/11/2022 | Edited on 12/11/2022

கரூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் இளைஞர்களிடம் இடையூறு செய்து உருட்டுக் கட்டையால் தாக்குதல் நடத்திய திருநங்கைகளின் செயல் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பொதுமக்களின் புகார் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ ஆதாரங்களைக் கொண்டு திருநங்கைகள் சுமார் 10 பேரை கரூர் நகரக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து திருநங்கைகள் போலீசாரை சூழ்ந்துகொண்டு கைகளைத் தட்டி, அநாகரிகமான செயலுடன் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாகப் பதற்றமான சூழல் நிலவியதால், அதிவிரைவுப் படை போலீசார் வரவழைக்கப்பட்டு, காவல் நிலைய நுழைவு வாயில் கதவுகள் சாத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது.