தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளை (04/04/2021) இரவு 07.00 மணியுடன் ஓய்கிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள, பிரச்சாரம் நிறைவடைந்த பிறகு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோர் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்:
1. தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த பிறகு தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தக்கூடாது.
2. தொலைக்காட்சி உள்ளிட்ட வேறு எந்த எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலமும் பரப்புரைகளை வெளியிடக்கூடாது.
3. தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
4. வேட்பாளர் வேறு தொகுதி வாக்காளராக இருந்தால், அவரை வெளியே செல்ல கட்டாயப்படுத்தக் கூடாது.
5. தேர்தல் நாளில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக மூன்று வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி பெற முடியும்.
6. வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வேட்பாளர்கள், முகவர்கள் வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது.
7. வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில் தேர்தல் நாள் பணிக்கு தற்காலிக பூத் அமைக்கலாம்.
8. தேர்தல் நாள் பணிக்கான பூத்தில் உணவுப் பொருட்கள் எதுவும் வழங்கக்கூடாது.