கன்னியாகுமாி முதல் களியக்காவிளை வரையிலான 58 கிமீ தூரத்திலான தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட உள்ளூா் மற்றும் வெளியூா் வெளி மாநில வாகனங்கள் செல்கின்றன. அதேபோல் தினமும் நூற்றுக்கு மேற்பட்ட உள்ளூா் கல்வி நிறுவன வாகனங்களும் செல்கின்றன. இந்தநிலையில் இந்த தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 100-க்கு மேற்பட்ட இடங்களில் உள்ள குண்டும் குழிகளால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.
இதனால் உயிா் பலிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகாித்து கொண்டேயிருக்கிறது. இந்தநிலையில் கடந்த 2017-ல் கன்னியாகுமாி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலயில் உள்ள குணடும் குழிகளை நிரப்பி சாலைகளை சீரமைக்க 36 கோடி ருபாய் நிதி ஓதுக்கியும் எந்த வித பணிகளும் நடக்கவில்லை. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பொிதும் சிரமபட்டு வருகின்றனா்.
இந்தநிலையில் கன்னியாகுமாி பாராளுமன்ற தொகுதி உறுப்பினா் காங்கிரஸ் வசந்தகுமாா் தலைமையில் குமாி மாவட்ட எம்எல்ஏ க்கள் திமுக சுரேஷ்ரஜன், மனோதங்கராஜ், ஆஸ்டின் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிாின்ஸ், விஜயதரணி, ராஜேஷ்குமாா் ஆகியோா் குமாி மாவட்ட கலெக்டா் மற்றும் தேசிய நெடுஞ்சாலை அதிகாாிகளை பலமுறை சந்தித்து தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை தொடா்ந்து இ்ன்று தேசிய நெடுஞ்சாலையான நாகா்கோவில் மற்றும் களியக்காவிளையில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமாா் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் பிாின்ஸ், விஜயரணி, ராஜேஷ்குமாா் தலைமையில் காங்கிரசாா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட காங்கிரசாா் கலந்து கொண்டதையடுத்து போலிசாா் அவா்களை கைது செய்தனா். இதையடுத்து குமாி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.