கத்தியை காட்டி வழிப்பறி கொள்ளை
வியாசர்பாடி மேல்பட்டிபொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் நாசர். இவரது மகன் அசாருதீன் (22). இவர், நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர், அசாருதீனிடம் கத்தியை காட்டி மிரட்டி விலை உயர்ந்த செல்போன், ரூ.2000 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். புகாரின்பேரில், செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் நபர்களை தேடி வருகின்றனர்.