தமிழகதின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது மேலும் படிப்படியாக வலுவிழக்கும் என்றும், இதனால் தமிழக்தின் உள் மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மாற்றம் காரணமாக சென்னை முழுவதும் பல இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை நிலவியது.
மேலும் கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டிவனம், வேலூர், திருவண்ணாமலை போன்ற இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பொழிந்து. குளிச்சியான சீதோஷண நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். புதுச்சேரி நேற்று பெய்த மழைக் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.