Skip to main content

தமிழ்நாட்டிற்கு நீர்வரத்து அதிகரிப்பு... மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

Increase in water supply to Tamil Nadu ...

 

டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டது. கடந்த 09ஆம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் கனஅடி என இருந்த நிலையில், 10ஆம் தேதி  நீர்திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

 

பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுவந்த நிலையில், நாள் ஒன்றுக்கு அணையின் நீர்மட்டம் ஒரு அடி அளவிற்கு குறைந்துவந்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.97 அடியாக உள்ளது. நீர் இருப்பு 34.41 டிஎம்சி ஆக இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்துவருவதால் பாசன தேவை என்பது குறைந்துவருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு தற்போது 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியில் இருந்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது கபினி அணையில் 14,688 கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 2,324 கனஅடி நீரும் திறக்கப்பட்டுவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்