Skip to main content

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

 Increase in water flow in Cauvery

 

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேசமயம் நீர் திறக்கக்கூடாது என கன்னட அமைப்புகள் போராடி வருகின்றன. தொடர்ந்து தமிழக அரசு காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை, கர்நாடக அரசு  நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

 

இந்நிலையில் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்துகொண்டிருந்த 6,000 கன அடி நீர் வரத்தானது 9,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,528 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி நீர் மட்டும் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று டெல்லியில் காவேரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்