அதிமுக எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் 2011 முதல் 2016 வரையிலும் 2016 முதல் 2021 வரையிலும் என இருமுறை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர். அதோடு அல்லாமல் நாமக்கல் அதிமுக நகரச் செயலாளராகவும் உள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் கணக்கில் வராத பணம், சொகுசு கார்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இன்று கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.