தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகிலுள்ள வடக்குமுத்துலாபுரம் கிராமத்தின் கூலித் தொழிலாளி ஜெய்சங்கர். இவர் மனைவி ரேவதி. இவர்களின் 6 வயது மகன் நகுலன். அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிப்பவன். அங்குள்ள கூட்டுறவு சங்கப் பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிய நகுலனை நேற்று முன்தினமிருந்து காணவில்லை. பெற்றோர்கள் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் எட்டயபுரம் போலீசில் புகார் செய்தனர்.
![INCIDENT IN TUTUCORINE... POLICE INVESTIGATION](http://image.nakkheeran.in/cdn/farfuture/HGBFt2LFPCHYZ7WwKCDLSksX083Uqvfm8XcB_HueehE/1577933851/sites/default/files/inline-images/uy6_0.jpg)
இதுகுறித்து விசாரித்த போலீசார் அதே ஊரைச் சேர்ந்த அருள்ராஜ்(28) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்க, அவனை நான்தான் அடித்துக் கொன்றேன் என்று சொன்னவன் உடல் கிடக்கும் இடத்தைக் காட்டாமல் போக்கு காட்டியுள்ளான். பின்னர் இன்ஸ்பெக்டர் கலா, தனிப்பிரிவு எஸ்.ஐ. சேகர் கொண்ட விசாரணை டீம் உரிய கவனிப்பில் அருள் ராஜைக் கவனிக்க, அதன் பிறகே, சிறுவனிடம் அவன் அப்பா எங்கே என்று நான் கேட்ட போது, அவன் எடக்கு மடக்காகச் சொன்னான் என்று அருள் ராஜா சொல்ல, பின்னர் போலீசாரின் சிறப்பு கவனிப்பிற்குப் பிறகே, ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தேன். அவன் மறுத்தான். ஆத்திரத்தில் அவனைத் தூக்கிச்சென்று அடித்துக் கொன்று சோளக்காட்டில் வீசியதாகச் சொல்ல, காக்கிச் சட்டைகளுக்கே குளிரிலும் வியர்த்துவிட்டது. இதனிடையே சிறுவனின் சடலம் கிடைக்கத் தாமதமாகவே, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட போக்குவரத்து ஸ்தம்பித்தது. வருவாய்த் துறையினர் அவர்களிடம் பேசி சமாதானப் படுத்தினர். பின்னர் காட்டில் கிடைத்த சிறுவனின் உடலை கைப்பற்றிய பேலீசார் உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
![INCIDENT IN TUTUCORINE... POLICE INVESTIGATION](http://image.nakkheeran.in/cdn/farfuture/4DzM_hHIJ4sIxV4jUFBpUlnFdt50_taO3AFHTYfi2tg/1577933868/sites/default/files/inline-images/FHG.jpg)
போக்சோவில் கைது செய்யப்பட்ட அருள்ராஜ் ஏற்கனவே ஒரு மூதாட்டி கொலையில் நிபந்தனை ஜாமீனிலிருப்பவன். தற்போது சிறுவனைக் கொலை செய்துள்ளான். சில வேளைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவன் போல பேசுகிறான். சைக்கோத்தனமாகவும் தெரிகிறது. சிறுவனின் உடல் போஸ்ட் மார்ட்டத்திற்குப் பிறகே காரணம் தெரிய வரும் என்கின்றனர் விசாரணைப் போலீசார்.
ஆறு வயது பாலகன் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த ஏரியாவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.